Tuesday, August 26, 2014

நான்கு திசையும் அதன் பயன்களும் என்ன ?

நான்கு திசையும் அதன் பயன்களும் என்ன ?
=======================================
1. வடக்குப் பாகம், நக்ஷத்திரப் பிரகாசம்.
2. கிழக்குப் பாகம், சந்திரப் பிரகாசம்.
3. மேற்குப் பாகம், சூரியப் பிரகாசம்.
4. தெற்குப் பாகம், அக்கினிப் பிரகாசம்.
======================================================
கிழக்குத் திக்கை நோக்கித் தியானம் செய்கிறது =போகசித்தியைப் பெறுகிறதற்கு.
மேற்கு = சொர்ண சித்தியைப் பெறுகிறதற்கு.
தெற்கு -=சாகாக்கலையை (நித்திய தேகத்தையும் ஞானசித்தியையும்) பெறுகிறதற்கு.
வடக்கு -=சித்தசுத்தியைப் பெறுகிறதற்கு.
வடக்கு= காற்புறம்,
தெற்கு= தலைப்பாகம்.
இதனால்தான் தெற்கு ஞானத்தில் சிறந்தது; வடக்கு அஞ்ஞானத்தில் அழுந்தியது.
தலை கீழ், கால் மேல் என்பதற்கு நியாயம்:-
அடி கீழ், முடி மேல்.
அடி தலை, முடி கால்.
தலை கிழக்கு, கால் மேற்கு.
கிழக்கு தாழ்ந்தது, மேல் திக்கு உயர்ந்தது.
மேலும் இவற்றை அனுபவத்தால் அறிக.
=============================================
மேற்கண்ட விளக்கம் வள்ளலாரின் உபதேச பகுதி இருந்து எடுக்கப்பட்டது .

No comments: