Monday, April 28, 2014

வாசி என்றால் என்ன ? வாசி யோகம் என்பது எது ? சிவயோகம் என்பது என்ன ?


வாசி என்றால் என்ன ? வாசி யோகம் என்பது எது ? சிவயோகம் என்பது என்ன ?
பிரபஞ்ச வெளியில் இருப்பது காற்று
. அது உடலுக்கு உள் வந்தால் மூச்சு .
மூச்சை நெறிபடுத்தினால் மூச்சு பயிற்சி அல்லது பிராணாயமம் . உரிய கால கணக்கோடு மூச்சை நெறிபடுத்தினால் உருவாவது வாசி.
.
வாசியை பிரானாயாமமாக செய்வது அடிப்படை வாசி யோகம் அல்லது வாசி பிராணாயமம் .
. . வாசியை ஆதார தளங்களில் நிறுத்தி உரிய முறைப்படி அஷ்டாங்க யோகம்மாக செய்வது வாசி யோகம் அல்லது வாசிதவம் ..
வாசி யோகத்துடன் கல்ப மருந்துகள் உட்கொண்டு, கடும் பததியம் இருந்து பத்து ஆண்டுகள் செய்வது சிவா யோகம் . சித்தர் நிலை அடைய செய்யும் கடைசி தவம்
பத்தியம் : பெண் அல்லது ஆண் , புளி, உப்பு , போதை பொருள் , மாமிசம் , மீன் தள்ள வேண்டும் . ஒருநேரம் உணவு உட்கொள்ளவேண்டும்.
இதன்படி கடும் தவம் செய்பவர் சித்தர் நிலை அடைவார்கள். அஷ்டமா சித்தி பெற்று, அழியாஉடல் பெறுவார் .. இறைவனை காண்பார்கள் . பேரின்பநிலை கிடைக்கும் .
இத்தகைய சித்தா இறைவனுடன் சேர்ந்து தானே இறைவன் ஆவது ஞான நிலை . ஞான நிலை பெற்றவரே ஞானி ., முனி , ரிஷி , பிரம்ம ரிஷி .
இந்த படித்தரத்தில் நீங்கள் அடையும் நிலையை பொருதது கட்டாயமாக பலன் உண்டு . .
பயிற்சியை இடையில் விட்டு விட்டு பிறகு விட்ட இடத்தில் இருந்து தொடரலாம்
இதைதான் விட்டகுறை தொட்ட குறை என்பார்கள் .
யார் வாசியோகம் செய்வது ?.:.
வாசி யோகா பிரனா யாமம்வரை யாரும் பயிற்சி செய்யலாம் . . உலக வாழ்க்கை வெற்றி பெறும். அனைத்து செல்வமும் கிடைக்கும் .. உடல் உறுதி பெறும். குறைவு இல்ளா இன்பம் கிடைக்கும் யாரும் எளிதில் வெல்ல முடியாது
. .
வாசியோகம் செய்வதற்கு முன் திருமணம் செய்து உலக வழ்வில் பெற வேண்டிய புத்திர செல்வங்கள் பெற்று முடித்து . நாம் செய்யவேண்டிய உலக கடமையை செய்து முடித்து நாற்பது வயதிற்கு மேல் அறுபது வயதிற்குள் செய்வது சிறப்பு . எழுபது வயதுவரை கடும் முயற்சி யுடன் செய்யமுடியும் . அதன் பின் என்பது வயது வரை செய்தால் நூறுவரை ஆயுள் . . என்பதிற்கு பின் பயன் இல்லை .
நாற்பது வயதிற்கு முன் வாசி யோகம் செய்தால் தவறு என்ன ?
சிறுவயதி வாசிதவம் , மற்றும் சிவா யோகம் செய்தவர் நீண்டநாள் வாழ முடியாது . திரு ஞான சம்பந்தர் , ஆதி சங்கரர் வள்ளலார், விவேகானந்தர் ஆகிய ஞானிகள் இளம் வயதில்பரு உடலை இழந்தார்கள் ..
இன்றைய ஆய்வு சொல்வது ; வாசிதவம் அல்லது அதற்க்கு ஒப்பான பயிற்சி இளம் வயதில் செய்தால், அவர்களின் விந்து அணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உள்ளது . இதனால் மட்டு தன்மை அல்லது குறை பாடு உள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு ..

4 comments:

Achyut Babu said...

Idhu thaangal eludhiyatha...


http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam

Unknown said...

thavarana news

Iraiyarul said...

கும்பகத்தில் சுழலும் சிவமூச்சு
----------------------------------
போக்கும் வரவும் அற்று மெளனத்தின் கும்பகத்தில் சுழலும் மூச்சே மாபெரும தவம். உள் வெளி காணா மெளனத்தின் அகத்தில் ஆடும் மூச்சே, உடல் பிணியையும், ஞானப் பிணியையும் சூன்யமாக்க வல்ல மாபெரும் தவம். உள்ளிழுக்கும் மூச்சே வரவாகும்.வெளியேறும் மூச்சே செலவாகும். இதில் கூர்ந்து கவனிக்கபட வேண்டியது, வெளியேறும் சூரியக்கலையின் விரைய மூச்சே எல்லா இன்னல்களுக்கு காரணமாய் இருக்கிற உண்மையை அறிய வேண்டும். அதாவது வரவைப் பற்றி கவலைப் படவேண்டாம். செலவுதான் கவலைக்கு உறியதாய் இருக்கிறது. எனவே வரவுக்கு ஏற்ப செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே சூரியக்கலையில் வெளியேறி விரயமாகும் மூச்சை, எந்த பயிற்சியுமின்றி 'யுக்தியால்' மட்டுமே, போக்கும், வரவும் அற்ற கும்பகத்தில் சிவமூச்சாகி 'உள் வெளி காணா அதிசய உலகத்தை' காணவல்ல மெளனத்தின் மூச்சை அறிந்து, தன் இருப்பு நிலைப் புரிதலின் கட்டுப் பாட்டில் வருவதே வாசி யோகத்தின் சிறப்பம்சமாகும்.

Iraiyarul said...

வாசி யோகம் என்றால் என்ன?
---------------------------
நம் சுவாசத்தை ஏற்றி இறக்காது பூரிக்கும் யோகமே வாசியோகமாகும். அதாவது,தன் மூச்சின் இயல்பு தன்மை கெடாதவாறு, அதன் போக்கு வரவுக்கு ஏற்ப அதோடு ஒன்றிணைந்து, நாம் ஈடுபடும் செயலின் விழிப்பு நிலையான யோகத்தை,யார் ஒருவர் சொல்லித் தருகிறார்களோ அது ஒன்றே வாசியோகமாகும். தன் இஷ்டத்துக்கு அவரவர்களின் கற்பனை வளத்தால் சொல்லித்தரும் ஏனைய வாசி யோகங்கள் அனைத்தும் அவர்களின் சுய நோக்க வியாபாரத் தந்திரத்தின் யூகங்களேயாகும்.
-இறையருள் வாசி சித்தர்-
Facebook. Iraiyarulsrichandrasekarar