Monday, June 20, 2016

பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் எப்படி செல்ல வேண்டும் என்பதையும், அதன் மூலம் என்னென்ன பலன்களை அடையலாம் என்பது பற்றிய நல்ல பல அரிய தகவல்களை பற்றி இங்கே பார்ப்போம்.

ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்ட
திருக்கடையூரில் பௌர்ணமி அன்று தரிசனம் செய்வது சிறப்பு.
சனிக்கிரக தொல்லையில் இருந்து விடுவிக்கும் திருநள்ளாறு சென்று இன்று வழிபடுவது இன்னமும் சிறப்பு.
அதை விட சிறப்பு நோய்களில் இருந்து நம்மை காக்கும் வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபடுவது..
இதையெல்லாவற்றையும் விட
மகாசிறப்பு ஊழ்வினைகளை நீக்கக்
கூடிய அண்ணாமலையார் கோயில் சென்று கிரிவலம் சென்றுவிட்டு வழிபடுவது.
பிறவிப்பிணி நீங்க வேண்டும் என
விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக அமையும் என்பது ஐதீகம்.
அதுபோல் ஏழு நகரங்களையும்
கடந்து முக்தி அடையும் ஏணியம்மன்
கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த
தீர்த்தமாக போற்றப்படுகிறது.
மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது. மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ்ஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும்.
நினைப்பவர்களுக்கே இந்த பலன்
என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்க பெறுவார்கள் என்று அருணாசல
புராணம் தெரிவிக்கிறது.
நம்பிக்கைதான் வாழ்க்கை.
இன்று படுக்கும் போது நாளை
காலையில் எழுந்து விடுவோம்
என்ற திட நம்பிக்கையில்தான் உறங்க
செல்கிறோம். நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றியும் சாதிக்கிறோம்.
நம்பிக்கை இல்லாதவர் இந்த
உலகில் வெற்றி பெற முடியாது.
எனவே பூரணமான நம்பிக்கையோடு
தொடங்குங்கள். மலையை சுற்றும் போது சிவலிங்கம், சிவன்,சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வர தொடங்கினால், நீங்கள் நினைத்த
எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்.
ஞாயிற்று கிழமை சுற்றினால்
சிவபதவி கிடைக்கும்
திங்கள் கிழமை சுற்றினால்
இந்திர பதவி கிடைக்கும்.
செவ்வாய் கிழமை சுற்றினால்
கடன்,வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.
புதன்கிழமை சுற்றினால் கலைகளில்
தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.
வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்..
சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.
நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில்
கணவனும்,மனைவியும் நீராடி
மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும்.மனம் நிம்மதி அடையும்.
மலை வலம் வரும் போது பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அருணாசல புராணத்தில் பிரம்மன் தெரிவிக்கிறார்.
மலை வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினையாமலும், அவர்களோடு
சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான்
உடையை உடுத்திகொண்டு விபூதி
அணிந்து, தானம் தாம் கொடுத்து
ஒருவரிடத்தும் தானம் வாங்காமல் நடந்தே வரவேண்டும். மலையை சுற்றி
இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும் வணங்கி சட்டையும், போர்வையும் நீக்கி குடை பிடிக்காமல், செருப்பு அணிப்பணியாமல்,பயம், கோபம், சோகம், இவற்றை நீக்கி குதிரை, யானை இவற்றின் மீதுஏறாமல் தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும்.
கையை வீசிக்கொண்டு போகாமலும், மனச் சோர்வில்லாமல், ஆர்வத்தோடு கைகளை தலை மேல் குவித்து கொண்டு, தீயவர்களை கண் எடுத்தும் பாராமல் நடத்தல் வேண்டும்.
மேலும் மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது என்கிறார்கள்.
அதற்கு புராணம் கூறும்
காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் செல்கிறான். அவன் தவம் புரியும் இடத்தைத்
தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத்தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர்,
திருவண்ணாமலை திருத்தலம்
சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்! என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழிய தொடங்குகிறது. பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியை சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது என்கிறார்கள். ஒரு கோடி மழைத்துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்.
விவசாயம் செழித்து வளரும். அமைதி
நிலவும். அது மட்டுமின்றி, அங்கு அமுத
புஷ்பமூலிகை என்கிற அரிய வகை தாவரம் தோன்றும். மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி.
எனினும், விடாமல் காயத்ரி மந்திரம்
ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம்சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது. மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்த படி கிரிவலம் வந்தால் நற்பலன்கள்
ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்ற பிறகே காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்
என்பது விதி என்கிறது புராணங்கள்.
எனவே,மலை சுற்றப்போகும் பக்தர்களை பரிசோதிக்க நினைப்பது இறைவனின் தினசரி விளையாட்டு. எனவே இச்சோதனைகளை வென்று மலை வலம் வரவேண்டும் என்பது ஐதீகம்.
ஓம் அருணாசலேஸ்வராய நம...!

No comments: